Payload Logo
தமிழ்நாடு

"அண்ணாமலை மன்னிப்பு கேட்கணும்"...ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கோரி வக்கீல் நோட்டீஸ்!

Author

bala

Date Published

annamalai bjp

சென்னை :அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அவதூறு கருத்துகள் பரப்பியதாகக் குற்றச்சாட்டி, பல்கலைக்கழகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ) நடராஜன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பியதாகவும், இது நடராஜனின் மானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடராஜன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸில், அண்ணாமலை உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெல் ரூ.50 மான இழப்பீடு கோரி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்படலாம் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதில் அரசியல் தலைவர்கள் தொடர்புபடுத்தப்படுவது சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அண்ணாமலையின் பதிவுகள் இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை மறைத்து தவறான கருத்துகளை பரப்பியதாக நடராஜன் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

தற்போது, அண்ணாமலை இந்த வக்கீல் நோட்டீஸுக்கு எவ்வாறு பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்பாரா அல்லது சட்டரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.