Payload Logo
இந்தியா

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

Author

bala

Date Published

annamalai BJP

டெல்லி :தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் உள்ளிட்ட பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால், பாஜக தேசிய தலைமை இதுவரை அண்ணாமலையின் தேசிய பொதுச்செயலாளர் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் போட்டுள்ள பதிவால் இந்த செய்தி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதே சமயம், ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 27, 2025 அன்று அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும் அவர் தமிழ்நாடு அரசியலிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்று உறுதியளித்தார்.

unknown node

இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று ஊகங்கள் எழுந்தன. தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஏப்ரல் 2025இல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படுவதாகவே பலரும் எதிர்பார்த்தனர்.

எனவே, அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் யதுவீர் மற்றும் தருண் விஜயின் பதிவுகளைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இருப்பினும், பாஜகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால், இந்த நியமனம் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில், அண்ணாமலையின் புதிய பதவி குறித்த ஊகங்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.