Payload Logo
தமிழ்நாடு

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் - தவெக தலைவர் விஜய் மரியாதை!

Author

gowtham

Date Published

Tvk leader Vijay

சென்னை :அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய், அஞ்சலை அம்மாளை கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அறிவித்தார்.

இந்த நிலையில், அவரது பிறந்தநாளான இன்று (ஜூன் 1) தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலை அம்மாளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது பதிவில், ''இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.

கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாளையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node