Payload Logo
தமிழ்நாடு

''தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்'' - அமித்ஷா மீண்டும் உறுதி.!

Author

gowtham

Date Published

Amit Shah - EPS

சென்னை :2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தனியார் நாளிதல் ஒன்றிக்கு பேட்டியளித்த அவர், லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்றார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA அரசு அமையும் என கூறினார்.தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, "தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க.வின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்கவில்லை, அது அவர்கள் கட்சி பிரச்னை. அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்"என்றார்.NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, ''தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார்'' என கூறியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமல் பேசியதால் அதிகமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.மேலும், NDA கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. எனவே சில காலம் காத்திருங்கள்" என்றார்.