Payload Logo
தமிழ்நாடு

"என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை" - அன்புமணி ராமதாஸ்.!

Author

gowtham

Date Published

Anbumani

சேலம் :பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி பதவிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் "100% பொய்யானவை" என்று கூறியுள்ளார்.

தற்பொழுது, சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, சேலம் எனக்கு பிடித்த மாவட்டம், நான் படித்த மாவட்டம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மாவட்டம். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய் எனவும், இந்த சமுதாயத்திற்காக, கட்சிக்காக என் மனம் மிகுந்த சுமையை சுமந்துக் கொண்டிருக்கிறது.

கட்சியின் உறுப்பினர் சேர்க்கையைதீவிரப்படுத்த வேண்டும். சித்திரை பெளர்ணமி மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. வன்னியர் சமுதாய மக்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்" என்று கூறினார்.

மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 2 எம்எல்ஏக்களுக்காக பிரார்த்தனை செய்வோம். சிகிச்சை பெறும் இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என்று ஜி.கே.மணி, அருள் பெயரை குறிப்பிடாமல் அன்புமணி பேசினார்.