Payload Logo
சினிமா

சிவ தாண்டவமாடும் பாலையா.! கவனம் ஈர்க்கும் ''அகண்டா 2'' டீசர்..!

Author

gowtham

Date Published

Akhanda 2 Thaandavam

கர்நாடகா :இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ் காட்சிகளின் மூலம் பிரபலமடைந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் 2021-ல் வெளியான அகண்டாவின் அடுத்த பாகமான இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பாலையாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரிலும் அதிரடி மாஸ் காட்சிகள் உள்ளன. ஒரு சூலத்தை கழுத்தில் சுத்த விட்டு குண்டாசுகளை பாலையா செதறவிடும் காட்சி கண்டிப்பாக வைரலாகி விடும். இதில் பாலையா ஒரு தீவிரமான தோற்றத்தில், நீண்ட தாடியுடன், ஆன்மீக ரீதியிலான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

unknown node

குறிப்பாக இந்த டீசரில் அவர்கள் வழங்கிய பின்னணி இசை சிறப்பிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் கீழ் ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சம்யுக்தா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் ஆதி பினிசெட்டி எதிரியாக நடிக்கிறார்,