Payload Logo
இந்தியா

அகமதாபாத் கோர விபத்து : நிவாரண விமானங்கள் அறிவித்த ஏர் இந்தியா!

Author

bala

Date Published

two relief flights

குஜராத் :அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air India விமானம் AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேரில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இப்படியான சூழலில், ஏர் இந்தியா நிறுவனம், அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களை அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்ல, தில்லி மற்றும் மும்பையில் இருந்து இரண்டு இலவச நிவாரண விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விமானங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இயக்கப்படுகின்றன. இந்தச் சேவை முற்றிலும் இலவசம்.

தில்லியில் இருந்து அகமதாபாத்திற்கு IX1555 என்ற விமானம் இன்று (ஜூன் 12) இரவு 11:00 மணிக்கு புறப்படும். திரும்பும் விமானம் IX1556, அகமதாபாத்தில் இருந்து தில்லிக்கு நாளை (ஜூன் 13) அதிகாலை 1:10 மணிக்கு புறப்படும். இதேபோல், மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு AI1402 விமானம் இன்று இரவு 11:00 மணிக்கு புறப்படும், மற்றும் திரும்பும் விமானம் AI1409, அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு நாளை அதிகாலை 1:15 மணிக்கு புறப்படும்.

இந்த விமானங்களில் பயணிக்க விரும்பும் தில்லி அல்லது மும்பையில் உள்ள உறவினர்கள் மற்றும் ஏர் இந்தியா பணியாளர்கள், 1800 5691 444 என்ற இலவச ஹாட்லைன் எண்ணை அழைத்து பதிவு செய்யலாம். வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்கள் +91 8062779200 என்ற எண்ணை அழைத்து ஏற்பாடு செய்யலாம். இந்த விமானங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அதைப்போல, காயமடைந்தோரின் மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும், சேதமான மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் எனவும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node