Payload Logo
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து : இதுவரை 133 பேர் உடல் மீட்பு!

Author

bala

Date Published

AI 171 crash site

குஜராத் :மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக பணிகளை மேற்கொன்டு வருகிறார்கள். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஏற்கனவே, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா தரப்பு உறுதிப்படுத்தியிருந்தது. 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது.

இருப்பினும், எத்தனைபேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள என்பதற்கான எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் தகவல்களாக உடல்கள் மீட்கப்படும் எண்ணிக்கை குறித்த தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே, 3.30 மணி வரை வெளியான தகவலின் படி 40 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் வெளியாகி இருந்தது.

அதனைத்தொடர்ந்து, தற்போது வரை கிடைத்த தகவலின்படி 133 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இன்னும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் உடல்கள் மீட்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் " அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை. விபத்து நடந்த இடத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் பேசினேன்" என கூறியுள்ளார்.

unknown node