''விசாரணை என துன்புறுத்தக் கூடாது'' - காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி, 'காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காவலர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.இந்த அறிவுறுத்தல்கள், திருப்புவனம் லாக்அப் மரணத்தைத் தொடர்ந்து, காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டவும் வழங்கப்பட்டவையாக தெரிகிறது.