Payload Logo
தமிழ்நாடு

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

Author

gowtham

Date Published

Srikanth - Krishna - Drug Case

சென்னை :நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, அரசு நீதிபதி ஒருவர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. வழக்கின் தன்மை, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அளவு, மற்றும் மனுதாரர்களின் குற்றப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் நேற்று முன் தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து, புழல் சிறையில் இருந்து இருவரும் இன்று  விடுவிக்கப்பட்டனர். ஜாமீன் நிபந்தனையாக, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தலா 10,000 ரூபாய் சொந்த ஜாமீனில் கையெழுத்திட வேண்டும். ஒவ்வொருவருக்கும் இரண்டு நபர்கள் ஜாமீன் கையெழுத்திட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை, இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.