Payload Logo
Untitled category

SKவுக்கு துப்பாக்கி...அப்போ தனுஷிற்கு? ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

Author

bala

Date Published

dhanush and vijay jana nayagan

சென்னை :விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் என்பது மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருவதாலும் இந்த படத்திற்கு பிறகு விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடவிருப்பதால் எந்த மாதிரியான அரசியல் கருத்துக்களை இந்த படம் எடுத்துரைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்துகொண்டு இருக்கிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவும் வில்லனாக பாபி தியோலும் நடிக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்த தகவல் தான். ஆனால், ரசிகர்களுக்கு தெரியாத ஒரு சர்ப்ரைஸான தகவலும் பரவி வருகிறது. அது என்னவென்றால், படத்தில் நடிகர் தனுஷ் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் தனுஷ் இருக்கிறார் என்று வெளிவந்த தகவலை பார்த்து ரசிகர்கள் ஏமாந்தது தான் மிச்சம்.

ஆனால், இந்த முறை உண்மையிலே தனுஷ் ஜனநாகயன் படத்தில் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை இயக்கும் எச் வினோத் அடுத்ததாக தனுஷ் வைத்து தான் ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக கடந்த ஆண்டில் இருந்தே தகவல்கள் ஓடி கொண்டு இருக்கிறது. எனவே, ஜனநாயகன் படத்தில் ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரம் தேவைப்பட்டது என்பதால் தனுஷ் நடித்து கொடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தனுஷும் விஜய்யும் ஆரம்ப காலங்களில் இருந்தே நண்பர்கள் எனவே, விஜய்க்காக அவர் நடித்து கொடுத்திருக்கலாம் எனவும் செய்திகள் பரவி கொண்டு இருக்கிறது. இந்த தகவலை பார்த்த தனுஷ் ரசிகர்கள் GOAT படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்தது போல இந்த படத்தில் தனுஷிற்கு என்ன கொடுக்க போகிறீர்கள்? என கேள்விகளை ஆர்வத்துடன் எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.