Payload Logo
தமிழ்நாடு

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

Author

gowtham

Date Published

flights cancelled chennai

சென்னை :சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்து நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 4 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் உட்பட மொத்தம் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இந்த விமானங்கள் டெல்லி, மும்பை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படவிருந்தவை. குறிப்பாக, ஏர் இந்தியாவின் ஒரு விமானம் மும்பைக்கு காலை 8 மணிக்கு புறப்படவிருந்தது, ஆனால் அது ரத்து செய்யப்பட்டது. இதேபோல், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்துக்கு முக்கிய காரணமாக நிர்வாக காரணங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், சில ஊடக அறிக்கைகளின்படி, பல்வேறு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த திடீர் ரத்து காரணமாக பயணிகள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். முன்கூட்டியே தகவல் அளிக்கப்படாததால், பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, சென்னையிலிருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.