Payload Logo
இந்தியா

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்: சிக்கி 7 பேர் உயிரிழப்பு? 25 பேர் காயம்..!

Author

gowtham

Date Published

RCB fans

பெங்களூரு :18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18, ஐபிஎல் 2025 சீசனும் 18 எனும் போது இப்போது முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டிராபி வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கோப்பை வென்று பெங்களூர் திரும்பியுள்ள ஆர்சிபி அணியை பாராட்டும் வகையில் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, வெற்றிக் கோப்பையுடன் பெங்களூரு திரும்பிய ஆர்சிபி வீரர்களுக்கு சாலையெங்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.  முன்னதாக விமான நிலையத்திற்கு சென்ற கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பூங்கொத்து கொடுத்து வீரர்களை உற்சாகமாக வரவேற்றார். விராட் கோலி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்தும் தெரிவித்தார்.

ஆனால், ஏராளமான ரசிகர்கள் கூடியதால், அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சின்னசாமி ஸ்டேடியம் முன்பாக கணக்கற்ற ரசிகர்கள் திரண்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் பலர் காயமடைந்தனர். இவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தற்பொழுது, நடந்துவரும் வெற்றி ஊர்வலங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்துள்ளது. 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.