Payload Logo
தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

Author

gowtham

Date Published

Tiruchendur - buses

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ஜூலை 4 முதல் 8 வரை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. இது முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். இதனால், குடமுழுக்கு காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடைபெறும், மேலும் இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கை ஒட்டி ஜூலை 5 முதல் 8ம் தேதி வரை, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும். பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க,மற்றும்TNSTCஆப்ஸ் மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.