நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!
Author
gowtham
Date Published

சென்னை :கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்கழுகுப்பட நடிகரான கிருஷ்ணாவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தற்போது, இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜரானபோது போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வகையில், நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னர், அவர் இங்கே இல்லை என்றும், கேரளாவில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணாவின் குடும்பத்தினர் மூலம் அவருக்கு இந்த தகவலை போலீசார் தெரிவித்த நிலையில், முதலில் விசாரணைக்கு வரவிருந்தார்.
ஆனால், திடீரென தனது செல்போனை ஆப் செய்துவிட்டு நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகி விட்டார் என்றும், அவர் கேரளாவில் தான் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பொது, சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிய முயற்சி நடந்து வருகிறது. மேலும், கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.