Payload Logo
இந்தியா

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

Author

gowtham

Date Published

Sikkim LANDSLIDE

சிக்கிம் :வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங் பகுதிகளில் சுமார் 1500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்இந்தச் சூழலில் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, லாச்சன் நதி அருகே மீட்புப் பணிக்காக ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். அப்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்,  3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 6 பேர் மாயமாகியுள்ளனர். தற்போது, மாயமான வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு தக்வாலின்படி, வடக்கு சிக்கிமின் சட்டானில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 01, 2025) மாலை 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. லாச்சனில் 115 சுற்றுலாப் பயணிகளும், லாச்சுங்கில் 1,350 சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருப்பதாக மங்கன் மாவட்ட எஸ்பி தெரிவித்தார். நிலச்சரிவு காரணமாக இருபுறமும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.