Payload Logo
இந்தியா

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Author

gowtham

Date Published

air india accident ahmedabad

குஜராத் :நேற்றைய தினம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா A1171 விமானம் மேக்னை பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா விமானம் AI-171 மதியம் 1:38 மணிக்கு 230 பயணிகள், 12 ஊழியர்களுடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது.

இந்த விமான விபத்தில் 241 பேர் பலியாகினர் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில்  169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன், 7 பேர் போர்ச்சுல், ஒருவர் கனடாவை சேர்ந்தவர். உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்பவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின், அவர்களது குடும்பத்தினரின் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் மட்டுமே எங்கள் முயற்சிகள் முழுமையாக கவனம் செலுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், தகவல்களை வழங்க ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வெளியே இருந்து அழைப்பவர்கள் +91 8062779200 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவித்துள்ளது.

unknown node