Payload Logo
உலகம்

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

Author

gowtham

Date Published

Mexico's Guanajuato State

குவானாஜுவாடோ :மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

கத்தோலிக்க விடுமுறையான ஜான் பாப்டிஸ்ட் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மக்கள் கூடியிருந்த இடத்தில துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொண்டாட்டத்தின் போது, மக்கள் தெருவில் நடனமாடியும் மது அருந்தியும் கொண்டிருந்தனர்.

தற்போது, துப்பாக்கிச் சூடு காயங்களுடன் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவானாஜுவாடோவில் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அதிபர் கிளாடியா ஷீன்பாம் வருத்தம் தெரிவித்தார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இருப்பதாகக் கூறினார்.

இதேபோல், கடந்த மாதம் குவானாஜுவாடோவின் சான் பார்டோலோ டி பெரியோஸில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்திருந்த விருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலியாகினர். மெக்சிகோ குண்டர் கும்பல்களின் கோட்டையாக அறியப்படுகிறது. அதிலும், மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவானாஜுவாடோ, பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.