Payload Logo
சினிமா

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்...வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

Author

bala

Date Published

Kuberaa joins the Elite 100cr club

சென்னை :தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளார். இதில் ராயன் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி அன்று வெளியாகி, இந்தியாவில் 110 கோடி ரூபாய் வசூலித்து, உலகளவில் 149 கோடி ரூபாய் வசூலை குவித்தது. வழக்கமாக இந்த மாதிரி ஒரு படம் வசூல் செய்கிறது என்றால் அது விஜய், ரஜினிகாந்த், அஜித் ஆகியோரின் படங்களாக தான் இருக்கும். ஆனால், முதல் முறையாக இவ்வளவு கோடி வசூல் செய்து பெரிய வெற்றிப்படமாகவும் மாறியது.

ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷிற்கு குபேரா திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வெளியானது. முதல் ஐந்து நாட்களில் உலகளவில் 95.13 கோடி ரூபாய் வசூல் செய்து, 100 கோடி கிளப்பை எட்டுவதற்கு 4.87 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்பட்டிருந்த நிலையில், தற்போது 100 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

குபேரா முதல் நான்கு நாட்களில் 55.10 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதில் முதல் நாளில் 14.75 கோடி, இரண்டாம் நாளில் 16.5 கோடி, மூன்றாம் நாளில் 17.35 கோடி மற்றும் நான்காம் நாளில் 6.50 கோடி வசூலித்தது. நாளுக்கு நாள் வசூல் குறைந்து கொண்டே இருந்தாலும் ஒரு வழியாக 100 கோடி வசூல் செய்துவிட்டது என்பதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

குபேரா படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமே தனுஷின் தனித்துவமான நடிப்பு, சேகர் கம்முலாவின் இயக்கம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் அவர் சிறப்பாக நடித்து முழு படத்தையும் தன்னுடைய தோளில் சுமந்து சென்றார். மேலும், குபேரா திரைப்படம் மொத்தமாகவே 120 கோடிகள் வரை செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஏற்கனவே, படம் 100 கோடி வசூல் செய்துவிட்ட நிலையில், விரைவில் பட்ஜெட் தொகையை மீட்டு எடுத்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.