Payload Logo
இந்தியா

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரிட்டன் செல்கிறார்.!

Author

Rohini

Date Published

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு நாள் இங்கிலாந்துக்கு (ஜூலை 23 முதல் 24 வரை) அதிகாரப்பூர்வ பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தில், அவர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தியா-பிரிட்டன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) முறையாக கையெழுத்திடுவது குறித்து விவாதிப்பார்.

பிரதமரின் வருகைக்கு முன்னதாக, இந்தியா-பிரிட்டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக பிரிட்டனுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் கே. துரைசாமி நேற்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பான சில இறுதி ஆவணங்கள் நிலுவையில் உள்ளன.

இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரிட்டன் இரண்டிற்கும் ஒரு திருப்புமுனையாக அமையும். இந்த ஒப்பந்தம் மே மாதம் இறுதியாக்கப்பட்டது மற்றும் இந்தியாவின் ஜவுளி, தோல் மற்றும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், பிரிட்டிஷ் விஸ்கி, ஆட்டோமொபைல் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி குறைப்புகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.