தமிழ்நாடு
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
Author
Rohini
Date Published

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் கீரன்குடி பகுதியில் விவசாயிகளை சந்தித்தார்.
அப்பொழுது, வயலில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி நெற்பயிர்களை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
unknown nodeஇந்த சந்திப்புகளில், விவசாயிகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், குறிப்பாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எழுப்புவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் உறுதியளித்தார்.