Payload Logo
சினிமா

அந்த மனசுதான் சார்கடவுள்! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்‌ஷய் குமார்.!

Author

Rohini

Date Published

Akshay-Kumar

சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு காப்பீடு வழங்கி உதவியுள்ளார். இது, தமிழ் திரைப்படமான வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் எஸ்எம் ராஜு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும்.

unknown node


இந்த துயர சம்பவம், திரைப்படத் துறையில் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியது. அக்ஷய் குமார், இந்தியாவில் உள்ள சுமார் 650-700 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு ஆரோக்கிய மற்றும் விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த காப்பீடு, ஸ்டண்ட் கலைஞர்கள் படப்பிடிப்பு தளத்தில் அல்லது வெளியில் காயமடைந்தால், 5 முதல் 5.5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சையைப் பெற உதவுகிறது.

மேலும், ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு 20-25 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அக்ஷய் 2017 முதல் தனது சொந்த செலவில் நிதியளித்து வருவதாகவும், இது ஸ்டண்ட் சமூகத்திற்கு பெரும் உதவியாக இருப்பதாகவும் மூவி ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்ஸ் அசோசியேஷனின் பொதுச் செயலாளர் அஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, திரைப்படத் துறையில் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தனிப்பட்ட முயற்சியாக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது. இதற்காக அக்ஷய் குமாருக்கு பாலிவுட் துறையில் இருந்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.